வரதராஜன்பேட்டையில் குடும்ப விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வரதராஜன்பேட்டையில் குடும்ப விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை ஊர் பொதுமக்கள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் குடும்ப விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான குடும்பவிழா அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் காலை முதல் மாலை வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ-மாணவிகளுக்கு யானைக்கு வால் வரைதல், உடைந்த முட்டையை கண்டுபிடித்தல், மெழுகுவர்த்தி ஏற்றுதல், புதையல் வேட்டை, பலூனிற்கு சேவிங் செய்தல், பானை உடைத்தல், மீன் பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பரிசு
பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இருந்து மறைகல்வி என்ற தலைப்பில் கேள்வி பதில் போட்டி நடைபெற்றன. வரதராஜன்பேட்டை பங்குதந்தை வின்சென்ட் ரோச்மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் மாணவ-மாணவிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மதிய உணவு அனைவருக்கும் அங்கேயே தயார் செய்யப்பட்டு ஒரே குடும்பமாக ஒற்றுமையை உணர்த்தும் வகையில் உண்டு மகிழ்ந்தனர்.

Related Tags :
Next Story