ராமநகர் தொகுதியில் எனது வெற்றி உறுதி: மந்திரி பதவி கிடைத்தால் மக்கள் பணியாற்ற தயாராக உள்ளேன் அனிதா குமாரசாமி பேட்டி


ராமநகர் தொகுதியில் எனது வெற்றி உறுதி: மந்திரி பதவி கிடைத்தால் மக்கள் பணியாற்ற தயாராக உள்ளேன் அனிதா குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 6 Nov 2018 4:30 AM IST (Updated: 6 Nov 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் தொகுதியில் எனது வெற்றி உறுதி என்றும், மந்திரி பதவி கிடைத்தால் மக்கள் பணியாற்ற தயாராக உள்ளதாகவும் அனிதா குமாரசாமி கூறினார்.

ஹாசன், 

ஹாசன் டவுன் உள்ள ஹாசனாம்பா கோவிலில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஆண்டுதோறும் ஹாசனாம்பாவின் தரிசனத்தை பெற்று வருகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். மாநில மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டியுள்ளேன். விவசாயிகள் கஷ்டத்தை நீக்கும் சக்தியை முதல்-மந்திரி குமாரசாமிக்கு அளிக்க வேண்டும் என்றும் அம்மனிடம் கேட்டு கொண்டு உள்ளேன்.

கடவுள் ஆசியும், மக்கள் ஆசீர்வாதமும் இருக்கும் வரை நான் அரசியலில் இருப்பேன். ராமநகர் உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து உள்ளது. இந்த இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். ராமநகர் தொகுதி மக்கள் என் மீது அளவு கடந்த பாசம் வைத்து உள்ளனர். அந்த தொகுதியில் எனது வெற்றி உறுதி.

மக்கள் பணியாற்ற தயார்

மந்திரியாக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. இதனால் மந்திரி பதவி கிடைத்தால் மக்கள் பணியாற்ற நான் தயாராக உள்ளேன். நிகில் அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பதும் எனக்கு தெரியாது. பிரஜ்வல், நிகில் இவர்கள் 2 பேரில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்பதை கடவுள் தான் முடிவு செய்வார். தனியார் வங்கிகள் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக தனியார் வங்கிகளை அழைத்து முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தி பிரச்சினைகளை சரிசெய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story