தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 6 Nov 2018 4:30 AM IST (Updated: 6 Nov 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று கொண்டகரஅள்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 47–வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் கொண்டகரஅள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் தாய்செல்வம் வரவேற்று பேசினார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி முன்னாள் செயலாளர் நீலாபுரம் செல்வம், மாவட்ட விவசாய அணி செயலாளர் உலகமாதேசன், ஊராட்சி செயலாளர்கள் மகாலிங்கம், பாலகிருஷ்ணன், சக்கரபாணி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைக்கழக பேச்சாளர்கள் கோபி காளிதாஸ், கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நல்லாட்சி புரிந்து வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்த அரசை பற்றி எதிர்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. கட்சிக்கு துரோகம் செய்து விட்டு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக சென்ற 18 பேர் மீது அந்தந்த தொகுதி மக்கள் கடும்கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இந்த அரசுக்கு பொதுமக்கள் உரிய ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாநில விவசாய அணி தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமி, தகடூர்விஜயன், ஆறுமுகம், நகர செயலாளர் குருநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாணவரணி ஒன்றிய பொருளாளர் சேமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story