கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை


கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 5 Nov 2018 11:15 PM GMT (Updated: 5 Nov 2018 9:32 PM GMT)

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர்.

கோவில்பட்டி,

தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளியூர்களில் உள்ள பொதுமக்கள் பஸ், ரெயில்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகிறார்கள். அவர்கள் பயணிக்கும்போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை உடன் எடுத்து செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வாறு எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்று காலையில் மதுரை ரெயில்வே கமாண்டோ போலீஸ் கோட்ட ஆணையர் முகைதீன் உத்தரவின் பேரில், மதுரை ரெயில்வே போலீஸ் வெடிகுண்டு நிபுணர் டேனியல் சுதாகரன், கோவில்பட்டி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அரியநாயகம் மற்றும் போலீசார், மோப்ப நாய் ரோவர் உதவியுடன் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.அப்போது பயணிகள் பட்டாசு போன்றவை எடுத்து செல்கின்றனரா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பயணத்தின்போது பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.


Next Story