கடந்த 4 நாட்களாக வாகன சோதனை: 224 ஆம்னி பஸ்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம்
கடந்த 4 நாட்களாக நடந்த வாகன சோதனையின் போது 224 ஆம்னி பஸ்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சேலம்,
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று அதிரடி சோதனை நடத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு சேலம் சரக போக்குவரத்து துணை ஆணையர் சத்திய நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர்.
சேலம் மேட்டுப்பட்டி பகுதியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் அந்த வழியாக சென்ற ஆம்னி பஸ்களை நிறுத்தி, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?, உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா?, அதிகளவு பாரம் ஏற்றப்பட்டுள்ளதா? மற்றும் என போக்குவரத்து விதிமீறல் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
அபராதம்
மொத்தம் 1,173 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 224 ஆம்னி பஸ்களுக்கு ரூ.6 லட்சத்து 17 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story