மணிமுத்தாறு அணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தல்
மணிமுத்தாறு அணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும் என கலெக்டரிடம், விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது,
நெல்லை,
வெள்ள உபரி நீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் சங்க தலைவர் முத்துக்குட்டி, செயலாளர் சுதாகர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
மணிமுத்தாறு அணையில் இருந்து 2018-ம் ஆண்டு 3-வது மற்றும் 4-வது ரீச்சிற்கு முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதி மொழி அளித்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி எங்கள் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையொட்டி காட்டாற்று வெள்ளம் 4-வது ரீச்சில் வருவதை அறிந்து விவசாயிகள் 4-வது ரீச்சின் மேல்பகுதி குளங்களுக்கு பார்வையிட சென்றோம். அப்போது, 4-வது ரீச்சில் இருந்து 10-வது மடைக்கு தண்ணீர் வருகிற குளங்களின் கரைகள், குளங்களின் நீர்வரத்து பாதைகள், உடைந்து கிடக்கும் ஷட்டர்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரவே இல்லை என்பது தெரியவந்தது.
இந்த ஆண்டு மணிமுத்தாறு அணையின் தண்ணீர் முன்னுரிமை 3-வது மற்றும் 4-வது ரீச்சிற்கு இருப்பதால் திசையன்விளை சுற்று வட்டார பகுதி விவசாயிகள் நலன் கருதியும், பொது மக்களின் குடிநீர் தேவையை கருதியும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, 10-வது மடைக்கு தண்ணீர் வருகிற கால்வாய், நீர்வரத்து பாதைகள் அனைத்தையும் தூர்வார வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story