தாதர் இந்து மில்லில் 2020-ம் ஆண்டுக்குள் அம்பேத்கர் நினைவிடம் கட்டப்படும் முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்

தாதர் இந்து மில்லில் 2020-ம் ஆண்டுக்குள் அம்பேத்கர் நினைவிடம் கட்டப்படும் முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்
x
தினத்தந்தி 7 Nov 2018 4:30 AM IST (Updated: 7 Nov 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

தாதர் இந்து மில்லில் 2020-ம் ஆண்டுக்குள் அம்பேத்கர் நினைவிடம் கட்டப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை, 

தாதர் இந்து மில்லில் 2020-ம் ஆண்டுக்குள் அம்பேத்கர் நினைவிடம் கட்டப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

அம்பேத்கர் நினைவிடம்

மும்பை தாதரில் உள்ள இந்து மில்லில் சட்டமேதை அம்பேத்கருக்கு மராட்டிய அரசு பிரமாண்ட நினைவிடம் கட்டுகிறது.

இருப்பினும் அதற்கான கட்டுமான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. அங்கு அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்கான பணியை விரைவில் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

2020-க்குள்...

தாதர் இந்து மில்லில் அம்பேத்கர் நினைவிடம் 2020-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தன்று சைத்ய பூமிக்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

எனவே 2020-ம் ஆண்டுக்கு பின் சைத்ய பூமி வரும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

இதேபோல நாக்பூரில் உள்ள தீக்சா பூமியிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story