9 மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 1,200 பேர் பலி தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள்
மும்பையில் 9 மாதத்தில் மட்டும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது 1,200 பேர் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர்.
மும்பை,
மும்பையில் 9 மாதத்தில் மட்டும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது 1,200 பேர் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர்.
தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
நாட்டிலேயே அதிகளவில் மின்சார ரெயில் சேவைகள் மும்பையில் தான் இயக்கப்படுகின்றன. இங்கு சுமார் 80 லட்சம் பயணிகள் தினசரி மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தண்டவாளத்தை கடந்து செல்ல இவர்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இருப்பினும் ரெயிலை பிடிப்பதற்காகவும், ரெயிலில் இருந்து இறங்கி செல்லும் போதும் அவசரத்தில் பயணிகள் பலரும் நடைமேம்பாலங்களை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதன் மூலம் ரெயிலில் அடிபட்டு அடிக்கடி உயிரிழப்பு நடந்து வருகிறது.
1,200 பேர் பலி
இதை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலனில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் தண்டவாளத்தை கடந்த வகையில் மட்டும் 1,200 பேர் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளதாக ரெயில்வே போலீஸ் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
இதுபற்றி ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story