மாவட்ட செய்திகள்

புயல் எச்சரிக்கை: சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை + "||" + Storm Warning: The fishermen did not go fishing in the cinamukutam

புயல் எச்சரிக்கை: சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

புயல் எச்சரிக்கை: சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
புயல் எச்சரிக்கையால் சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி,

தென்மேற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் கரையோர பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, கடல் கொந்தளிப்பு மற்றும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.


சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் காலையில் கடலுக்கு சென்று விட்டு மாலையில் கரைக்கு திரும்புவார்கள். புயல்  எச்சரிக்கை விடுத்ததையடுத்து சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், விசைப்படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள்  ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள். புயல் எச்சரிக்கையையொட்டி நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யத்தில் நீடிக்கும் துயரம்: புயல் நிவாரண முகாம்களில் மக்கள் குவிந்தனர்
வேதாரண்யத்தில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள். குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நேற்று 5-வது நாளாக துயரம் நீடித்தது.
2. புயலுக்கு பிறகும் தொடரும் சோகம்: கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு
புயலுக்கு பிறகும் கொடைக் கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
3. புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உடனே நிவாரணம் வழங்கவேண்டும் - ரங்கசாமி வலியுறுத்தல்
கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உடனே கணக்கெடுப்பு பணி நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
4. புயல் சேதத்தை சீரமைக்க தமிழகம், புதுவைக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும் - ஆர்.நல்லக்கண்ணு பேட்டி
புயல் சேதத்தை சீரமைக்க தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்தார்.
5. புயல் சேத மதிப்பை அதிகாரிகள் கணக்கெடுப்பார்கள் - காரைக்காலில் நாராயணசாமி பேட்டி
கஜா புயலால் ஏற்பட்ட சேத மதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பார்கள் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.