மாவட்ட செய்திகள்

கருப்பு பேட்ஜ் அணிந்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நிலுவை தொகை வழங்க கோரிக்கை + "||" + The request of the farmers to wear a black badge and pay the sum of cash

கருப்பு பேட்ஜ் அணிந்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நிலுவை தொகை வழங்க கோரிக்கை

கருப்பு பேட்ஜ் அணிந்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நிலுவை தொகை வழங்க கோரிக்கை
நிலுவை தொகை வழங்க கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015–16–ம் ஆண்டிற்கான மாநில அரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் 2 ஆண்டுகளுக்கு சுமார் 30 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளது.


 இந்த நிலுவை தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர். மேலும் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மாவட்ட கலெக்டரிடம் நிலுவை தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும் படி கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனுவும் கொடுத்திருந்தனர்.


இந்தநிலையில் நிலுவை தொகை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விவசாயிகள் தீபாவளி பண்டிகையை புறக்கணித்து கருப்பு தீபாவளியாக அனுசரிக்க முடிவு செய்தனர். அதன்படி கரும்பு விவசாயிகள் தஞ்சை குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்தும் கைகளில் கரும்பு ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலுவை தொகை இன்னும் 15 நாட்களுக்குள் வழங்காவிட்டால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

இதில் தஞ்சை, திருவையாறு பகுதிகளை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டம்
செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘தற்கொலை செய்து கொள்வோம்’ என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில், குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.