மாவட்ட செய்திகள்

பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரெயில்வே போலீசார் வழங்கினர் + "||" + The train was issued by the Railway police to provide awareness for passengers on safe travel

பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரெயில்வே போலீசார் வழங்கினர்

பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரெயில்வே போலீசார் வழங்கினர்
திருவாரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரெயில்வே போலீசார் வழங்கினர்.
திருவாரூர்,

திருவாரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரெயில்வே போலீசார் துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கினர்். நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில்் வந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர். அப்போது ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பான பயணம் குறித்து விழப்புணர்வு பிரசாரம் செய்தனர்.


இலவச பாதுகாப்பு தொடர்பு எண்

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் கூறுகையில்,

பயணிகள் உடைமைகளை பாதுகாப்பாக இருக்கையின் கீழ் வளையத்தில் பூட்டி வைக்க வேண்டும். ஜன்னல் அருகில் நகைகள் வெளியில் தெரியும்படி அமரக்கூடாது. கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு, இலவச பாதுகாப்பு தொடர்பு எண்ணான 182-க்கு தொடர்்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது அடையாளம் தெரியாதவர்்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
2. டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
3. மே தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
மே தினத்தையொட்டி தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று குளித்தலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
4. நாகர்கோவிலில் ‘ஆட்டிசம்’ குறித்த விழிப்புணர்வு பேரணி மாணவ– மாணவிகள் பங்கேற்பு
நாகர்கோவிலில் மாணவ– மாணவிகள் பங்கேற்ற ‘ஆட்டிசம்‘ குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
5. வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் தொழிலாளர் துறை சார்பில் நடந்தது
வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம், தொழிலாளர் துறை சார்பில் நடந்தது.