தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி நாளில் ரூ.3¾ கோடி மது விற்பனை
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி நாளில் ரூ.3¾ கோடி மது விற்பனை நடந்து உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி நாளில் ரூ.3¾ கோடி மது விற்பனை நடந்து உள்ளது.
டாஸ்மாக்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கடந்த ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பல்வேறு சிக்கல்களை சந்தித்த டாஸ்மாக் கடைகள், சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் முழுவீச்சில் விற்பனையை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 105 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் தீபாவளி அன்று விற்பனை மும்முரமாக நடந்தது. மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
ரூ.3¾ கோடி
கடந்த ஆண்டு மொத்தம் 5 ஆயிரத்து 670 பெட்டி மதுபாட்டில்கள் விற்கப்பட்டு இருந்தது. இதனால் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன. இந்த ஆண்டு மொத்தம் 5 ஆயிரத்து 900 மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. இந்த மதுபாட்டில்கள் மொத்தம் ரூ.3 கோடியே 90 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டை விட மதுவிற்பனை சற்று அதிகரித்து உள்ளது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story