எண்ணூரில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு


எண்ணூரில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:45 PM GMT (Updated: 7 Nov 2018 6:54 PM GMT)

எண்ணூரில் வழிப்பறி கொள்ளையர்களை கண்காணிக்கவும், விபத்துகளை கட்டுப்படுத்தவும் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர்,

எண்ணூரில் உள்ள 55 கிராமங்களின் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில், எண்ணூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களை கண்காணிக்கவும், விபத்துகளை கட்டுப்படுத்தவும் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி எண்ணூர் காமராஜர் சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிராம ஒருங்கிணைப்பு சங்க தலைவர் வி.கே.ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரியாசுதின், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைசெயலாளர் மாடசாமி வரவேற்றார்.

இதில் மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வன், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர். முடிவில் சங்க பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Next Story