திருப்புங்கூரில் சிவலோகநாதனார் குளத்தில் நீர் நிரப்ப வேண்டும் பக்தர்கள் கோரிக்கை


திருப்புங்கூரில் சிவலோகநாதனார் குளத்தில் நீர் நிரப்ப வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2018 4:00 AM IST (Updated: 8 Nov 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே திருப்புங்கூரில் சிவலோகநாதனார் கோவில் குளத்தில் நீர்நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூரில் நந்தனார் வழிபடுவதற்கு நந்தி விலகிய சிவலோகநாதனார் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோவிலாகும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலில் பிரதோஷ காலங்களில் நந்தனார் வழிபடுவதற்காக விலகிய நந்திக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இத்தகைய புகழ்பெற்ற கோவிலின் முன்பு குளம் உள்ளது. இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாததால் குளத்திற்கு நீர்வரக்கூடிய பாதை செடி, கொடிகள் மண்டி ஆக்கிரமித்துள்ளன. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் குளத்திற்கு வரவில்லை. எனவே அரசு நடவடிக்கை எடுத்து சிவலோகநாதனார் கோவில் குளத்தை சீரமைத்து நீர்நிரப்ப வழிவகை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story