அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் மருந்துகள் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதி


அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் மருந்துகள் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 8 Nov 2018 3:30 AM IST (Updated: 8 Nov 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் மருந்துகள் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

உத்தமபாளையம், 


தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம், சின்னமனூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவபிரிவு செயல்படுகிறது. இதே போல் காமயகவுண்டன்பட்டி, கோம்பை, வீரபாண்டி, கூடலூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சித்த மருத்துவ பிரிவு செயல்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் ‘அம்மா சஞ்சீவி’ என்ற பெயரில் இயற்கை மருந்துகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், சர்க்கரைநோயாளிகளுக்கு நாவற்கொட்டை மாத்திரை, திரிபலா, சிறுகுறிஞ்சான் மாத்திரையும், மூட்டுவலி பாதிப்பில் இருப்பவர்களுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டது. இதனை வாங்க அதிக அளவில் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்தனர்.

இந்தநிலையில் சமீப காலமாக இந்த மருந்துகள் மருத்துவமனைகளில் வழங்கப்படவில்லை. தொடர்ந்து சித்த மருந்துகள் சாப்பிட்டு வந்தவர்கள் இப்போது இதனை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். சித்த மருத்துவ பிரிவுகளில் நோயாளிகள் சென்று கேட்டால் மருந்துகள் வரும் என்று மட்டும் பதில் கூறுகின்றனர்.

இதனால் மருந்துகள் இன்றி நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். சித்த மருந்துகளை விரும்பி சாப்பிடுபவர்கள் மீண்டும் அலோபதி மருந்தை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தட்டுப்பாடு இல்லாமல் நோயாளிகளுக்கு தேவையான சித்த மருந்துகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story