ராமேசுவரத்தில் இளைஞர்களிடையே மோதல் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு
ராமேசுவரத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் தீபாவளியன்று ராஜீவ்காந்தி நகர் மற்றும் டி.எஸ்.எம். நகர் தெருவை சேர்ந்த இளைஞர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனராம். பின்னர் இது மோதலாக மாறி ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இந்த தகராறின்போது மர்ம நபர் ஆசிட் வீசியுள்ளார்.
அப்போது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த கவுசல்யா (வயது20) என்பவர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் படுகாயம் அடைந்து அலறி துடித்த அவர் உடனடியாக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் களஞ்சியம், செல்லப்பாண்டி, முனீசுவரன், நம்புராஜன் ஆகிய 4 பேரையும் பிடித்து நகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாசு, அருண்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story