மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு + "||" + Announcements of tomorrow mother camps in Perambalur-Ariyalur districts

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகாவில் அயிலூர், வேப்பந்தட்டை தாலுகாவில் பெரியவடகரை, குன்னம் தாலுகாவில் வயலப்பாடி மற்றும் ஆலத்தூர் தாலுகாவில் கொட்டரை ஆகிய கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தாலுகாவில் பெரிய திருக்கோணம், மேலப்பழூர், உடையார்பாளையம் தாலுகாவில் கோடங்குடி (தெற்கு), காட்டகரம் (தெற்கு), செந்துறை தாலுகாவில் செந்துறை, ஆண்டிமடம் தாலுகாவில் இடையக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.


இந்த முகாம்களில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். இந்த தகவலை பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மா இருசக்கர வாகனங்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
அம்மா இருசக்கர வாகனங்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.
2. ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந் தேதி நடக்கிறது
மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் வணிக சங்கம் சார்பில் ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
3. சூரத் தீ விபத்து எதிரொலி: நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம்
சூரத் தீ விபத்து எதிரொலியாக நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
4. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
5. கரூர் பகுதிகளில் மின் இணைப்பில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் 20, 21-ந்தேதிகளில் நடக்கிறது
கரூர் பகுதிகளில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 20, 21-ந்தேதிகளில் நடக்கிறது.