சேலம் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்


சேலம் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
x
தினத்தந்தி 8 Nov 2018 4:02 AM IST (Updated: 8 Nov 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகளை, மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் மாதேஸ்வரன் ஆகியோர் பரிந்துரையின் பேரில், மாநில துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நியமனம் செய்து உள்ளார்.

கருப்பூர்,

அதன்படி மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் ஆகிய பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் மாதேஸ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் பிரேமா செம்மன்னன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெமினி, எடப்பாடி நகர செயலாளர் பூக்கடை சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாதப்பன், மூர்த்தி, கே.பி.மணி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, அவைத்தலைவர் குமார், பேரூர் செயலாளர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story