கீழ்வேளூர் அருகே கோஷ்டி மோதல்; 5 பேர் காயம் போலீசார் விசாரணை
கீழ்வேளூர் அருகே நடந்த கோஷ்டி மோதலில் 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர்,
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆவராணி புதுச்சேரி வடக்கு தெருவில் உள்ள சில இளைஞர்களுக்கும், பக்கத்து தெருவான கீழ காத்திருப்பை சேர்ந்த சில இளைஞர்களுக்கும் தீபாவளியன்று வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த நிலையில் ஆவராணி புதுச் சேரியை சேர்ந்த சிவராமன் (வயது 44), செல்வம் (45), கவுதமன் (29), சுரேஷ் (30), ராமநாதன் (37) ஆகியோர் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் சமாதானம் செய்ய வந்தவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
5 பேர் காயம்
இதில் காயமடைந்த 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story