துணை தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் ஷில்பா உத்தரவு
நெல்லை மாவட்டத்தில் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டு உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டு உள்ளார்.
துணை தாசில்தார்கள் இடமாற்றம்
நெல்லை மாவட்ட வருவாய் அளவில் துணை தாசில்தார்கள் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேரன்மாதேவி வட்ட வழங்கல் அலுவலர் ஞானசேகரன், தென்காசி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சண்முகத்தாய், வீரகேரளம்புதூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் குமார் (கா. பிரிவு), சேரன்மாதேவி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருவேங்கடம்
திருவேங்கடம் மண்டல துணை தாசில்தார் திருமலைக்குமார், திருவேங்கடம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (கே.பிரிவு) சொக்கலிங்கம், திசையன்விளை வட்ட வழங்கல் அலுவலராகவும், பாளையங்கோட்டை மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன், சங்கரன்கோவில் மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (க.பிரிவு) கோமதி, அதே அலுவலகத்தில் உள்ள ரவிக்குமார் என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார். திசையன்விளை வட்ட வழங்கல் அலுவலர் பாலசாந்தி, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஈ.பிரிவு), சேரன்மாதேவி உதவி கலெக்டர் தலைமை உதவியாளர் ராமச்சந்திரன் மருத்துவ விடுப்பு முடிந்து அதே இடத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
நெல்லை-பாளையங்கோட்டை
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஈ.பிரிவு) விஜி, பாளையங்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், நெல்லை தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி, நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (க.பிரிவு) ரவிக்குமார், நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலக தலைமை உதவியாளராகவும், அதே பொறுப்பில் இருந்த ஜெஸ்லெட் ஜெயா, திசையன்விளை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிறப்பித்து உள்ளார்.
Related Tags :
Next Story