தேவகோட்டையில் பரவி வரும் மர்ம காய்ச்சல் அரசு மருத்துவமனையில் அலைமோதும் பொதுமக்கள்


தேவகோட்டையில் பரவி வரும் மர்ம காய்ச்சல் அரசு மருத்துவமனையில் அலைமோதும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 8:18 PM GMT)

தேவகோட்டையில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அலைமோதுகின்றனர். அங்கு போதிய டாக்டர்கள் இல்லாததால், கூடுதல் டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேவகோட்டை,

தேவகோட்டையில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், காய்ச்சல் வந்த பின்பும் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின் றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையால் தான் காய்ச்சல் குணமடைவதாக பொதுமக்கள் பெரிதும் நம்பி உள்ளனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். தேவகோட்டை தாலுகாவில் 700-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இங்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் டாக்டர் ராமு தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், தற்போது உள்ள டாக்டர்கள் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து உடனுக்குடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எனவே தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story