மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு + "||" + Officials in 'Sarkar' movie theaters in Pudukottai

புதுக்கோட்டையில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

புதுக்கோட்டையில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை,

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி, தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசின் இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால் அ.தி.மு.க.வினர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் சில இடங்களில் அ.தி.மு.க.வினர் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக கலெக்டர் கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் 3 தியேட்டர்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் கடந்த 6-ந் தேதியில் இருந்து டிக்கெட் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் நிருபர்களிடம் கூறுகையில், “புதுக்கோட்டையில் 3 தியேட்டர்களில் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கலெக்டருக்கு வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது டிக்கெட் கவுண்ட்டரில் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை தடை செய்வது குறித்து கலெக்டரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் தரமான மடிக்கணினி வழங்க கோரிக்கை
தரமான மடிக்கணினி வழங்கக்கோரி திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. திருமானூர் கைலாசநாதர் கோவிலில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் குளிக்கச்சென்ற சிறுவர்கள் ஆற்றின் கரையில் கண்டெடுத்த 2 சாமி கற்சிலைகள் திருமானூர் கைலாசநாதர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
3. கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. தலைஞாயிறு பகுதியில் சம்பா சாகுபடியை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
தலைஞாயிறு பகுதியில் சம்பா சாகுபடியை நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
5. மக்கள்தான் சொல்ல வேண்டும்: இலவசங்கள் வேண்டாம் என்று நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் கூறக்கூடாது அமைச்சர் பேட்டி
இலவசங்கள் வேண்டாம் என மக்கள் தான் சொல்ல வேண்டுமே தவிர, காசுக்காக நடிப்பவர்களும், படத்தை தயாரிப்பவர்களும் சொல்லக்கூடாது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.