எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலி


எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலி
x
தினத்தந்தி 9 Nov 2018 4:30 AM IST (Updated: 9 Nov 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலியானார்.

எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் பரத்(வயது 16). இவர் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவர் பரத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மூளை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story