மாவட்ட செய்திகள்

கடல் சீற்றத்தால் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை + "||" + Cuddalore fishermen did not go fishing because of sea fury

கடல் சீற்றத்தால் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றத்தால் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடலூரில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, சொத்திக்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் தினமும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியது. கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் விசை படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

மீன்கள் வரத்து இல்லாததால் துறைமுக பகுதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடலூர் தாழங்குடா கடற்கரையில் இருந்து பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களும் தங்கள் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். ஒருசில மீனவர்கள் மட்டும் ஐ.பி. என்ற படகில் சென்று மீன்பிடித்தனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் அவர்களது வலையில் குறைந்த அளவிலேயே மீன்கள் சிக்கின.


தொடர்புடைய செய்திகள்

1. கடல் சீற்றம் எதிரொலி: கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை எச்சரிக்கை
கடல் சீற்றமாக இருப்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. கடலூர் அருகே கடல் சீற்றம்: படகு மூழ்கியதால் ஆழ்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு
கடல் சீற்றத்தால் ஆழ்கடலில் தாழங்குடா மீனவர்களின் படகு மூழ்கியது, கடலில் தத்தளித்த 5 மீனவர்களை மற்றொரு படகில் வந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
3. கோடியக்கரையில் 2-வது நாளாக கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கோடியக்கரையில் 2-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
4. வேதாரண்யத்தில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
வேதாரண்யத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
5. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு
குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.