மாவட்ட செய்திகள்

விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Villupuram, coalition and counterfeiting: Congress party demonstrated

விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பணம் மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம், 

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்தும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 3-ம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நேற்று காலை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

இதில் அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தயானந்தம், விழுப்புரம் நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, சுரேஷ்ராம், மாவட்ட பிரதிநிதி தன்சிங், மாவட்ட துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், விஜயரங்கன், நாராயணசாமி, குப்பன், பொதுச்செயலாளர்கள் காஜாமொய்தீன், பாலன், விஸ்வநாதன், ராஜேஷ், மாவட்ட செயலாளர்கள் மகாலிங்கம், சண்முகம் உள்பட வட்டார தலைவர்கள், பேரூர் கழக தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

கூட்டேரிப்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மயிலம் தெற்கு வட்டார தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜானகிராமன், சிறப்பு பார்வையாளர் விஜய்இளஞ்செழியன், வடக்கு வட்டார தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் தெற்கு வட்டார துணை தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பட்டதாரி பிரிவு மாவட்ட தலைவர் எத்திராஜ், நிர்வாகிகள் சீத்தாபதி, வக்கீல் சுப்பையா, சக்திவேல், பரமேஸ்வரன், மாவட்ட பொருளாளர் விநாயகம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவராமன், வட்டார தலைவர் இளவரசன், நகர தலைவர் என்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற மேலிட பொறுப்பாளர் பிராங்கிளின் பிரகாஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், வீரமுத்து, மாவட்ட துணைத்தலைவர் மாரியாப்பிள்ளை, விவசாய பிரிவு மாநில செயலாளர் ராஜீ, ஆறுமுகம், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கண்ணதாசன், நகர நிர்வாகி ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.