அரியலூரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்


அரியலூரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 5:31 PM GMT)

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்புடன் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 54 கோரிக்கை மனுக்களை பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று, தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பாளர்) காமாட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story