மாவட்ட செய்திகள்

பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Spray anesthesia on women Home jewelry, money theft of the homeowner owner The police are searching for mystery people

பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து
ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
மத்தூர் அருகே பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்தூர்,

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வடுகிசெட்டி (வயது 53). இவர் சென்னையில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கலாவதி. மருமகள் ஜெயா. வடுகிசெட்டி, மகனுடன் சென்னையில் தங்கி இருப்பதால் கலாவதி மருமகள், பேரன்களுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கலாவதி, மருமகள், பேரன்களுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு கலாவதி, ஜெயா ஆகியோர் எழுந்து வந்தனர். அப்போது மர்ம ஆசாமிகள், 2 பேர் மீதும் மயக்க மருந்தை தெளித்து உள்ளனர். இதனால் அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

பின்னர் மர்ம ஆசாமிகள் பீரோக்களை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடி கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த கலாவதி, ஜெயா ஆகிய 2 பேரும் நடந்த சம்பவம் குறித்து வடுகிசெட்டி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டு குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தக்கலை அருகே ஆசிரியைக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 9 பவுன் நகை பறிப்பு
தக்கலை அருகே ஆசிரியைக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 9 பவுன் நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே பழவியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டது.
3. பயணியிடம் துப்பாக்கி முனையில் நகை - பணம் பறித்தவருக்கு 4 ஆண்டு ஜெயில்
வாடகை காரில் சென்ற பயணியிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் பறித்தவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
4. தாசில்தார் வீட்டில் நகை-பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தாசில்தார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. கன்னியாகுமரியில் துணிகரம் : கிறிஸ்தவ ஆலயத்தில் 18 பவுன் நகை கொள்ளை - கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து மர்ம நபர் கைவரிசை
கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 18 பவுன் நகைகள் கொள்ளை போயின. கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-