தூத்துக்குடி, கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி, கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
இதேபோல் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வேல்துரை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story