மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீங்கியது + "||" + Tuticorin Fishermen go to sea The ban was lifted

தூத்துக்குடியில்மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீங்கியது

தூத்துக்குடியில்மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீங்கியது
தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை நீங்கியது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை நீங்கியது.

மீன்பிடிக்க அனுமதி

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் லேசான வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதற்கிடையே தூத்துக்குடி மீனவர்கள் கடந்த 5-ந்தேதி முதல் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்த தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு மட்டும் செல்லாமல் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் இன்று(சனிக்கிழமை) முதல் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்று அறிவித்து உள்ளனர். இதனால் 5 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.

மழை விவரம்

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் - 14, குலசேகரன்பட்டினம்- 12, காயல்பட்டினம் - 3, விளாத்திகுளம் - 12, வைப்பார் - 22, சூரங்குடி - 27, கோவில்பட்டி - 1, கயத்தார் - 1, கடம்பூர் - 6, ஓட்டப்பிடாரம் - 19, வேடநத்தம் - 7, கீழஅரசடி - 5.6, சாத்தான்குளம் - 6, ஸ்ரீவைகுண்டம் - 15.5, தூத்துக்குடி - 7.2