மாவட்ட செய்திகள்

காய்ச்சல் ஏற்பட்டால் டாக்டர்கள் ஆலோசனைப்படியே பொதுமக்கள் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு + "||" + In the event of a fever Doctors counseling The public must take medicines Minister Vijaya Basker

காய்ச்சல் ஏற்பட்டால் டாக்டர்கள் ஆலோசனைப்படியே பொதுமக்கள் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

காய்ச்சல் ஏற்பட்டால் டாக்டர்கள் ஆலோசனைப்படியே பொதுமக்கள் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
காய்ச்சல் ஏற்பட்டால் டாக்டர்கள் ஆலோசனைப்படியே பொதுமக்கள் மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
புதுக்கோட்டை,

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்.


அவர் பேசுகையில், சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டைவலி போன்றவை பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். பொதுவாக நீரிழிவு, இதயம், நுரையீரல் உள்ளிட்ட ஒரு சில நோய்கள் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இத்தகைய தொற்று நோய்கள் ஏற்படும். எனவே பொதுமக்கள் எந்த விதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டும். பஸ்கள், ரெயில்கள், மாடிப்படி கைப்பிடிகள், கதவு கைப்பிடிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று வந்தால் 30 வினாடிகளுக்கு குறையாமல் நன்றாக கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் நோய்கள் பரவாமல் பாதுகாத்து கொள்ளலாம், என்றார்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் மாணவிகள் சுகாதார உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேச்சு, கவிதை போட்டி மற்றும் வில்லுப்பாட்டு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணவிகள் கை கழுவுவது குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கீழ்வேளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
கீழ்வேளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. ஆரணி பகுதியில் அரசு சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி இன்டர்நெட் சேவை திறனை அதிகரிக்க கோரிக்கை
ஆரணி பகுதியில் இன்டர்நெட் சேவை பாதிப்பால் அரசு சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இன்டர்நெட் சேவை திறனை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
3. திருச்சியில் பலத்த காற்றுடன் மழை: மின்தடையால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
திருச்சியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
4. தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
5. மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பொதுமக்கள் வலியுறுத்தல்
மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.