மாவட்ட செய்திகள்

ஜேடர்பாளையம் அருகே ரேஷன்கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Near Jeddarpalayam The suicide bomber was killed by a retailer

ஜேடர்பாளையம் அருகே ரேஷன்கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே
ரேஷன்கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஜேடர்பாளையம் அருகே ரேஷன்கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர், 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி தாலுகா பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 49). இவர் அருகே உள்ள நெட்டையம்பாளையம் கிராமத்தில் ரேஷன்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயா(40). இவர்களுக்கு சரவணன்(20) என்ற மகன் உள்ளார்.

சமீபகாலமாக கடன் பிரச்சினையாலும், உடல்நலக்குறைவாலும் சுப்பிரமணி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே வீட்டுக்கு வந்த அவருடைய மனைவி விஜயா, கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. செல்போன் தொலைந்ததால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் செல்போன் தொலைந்ததால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. திருச்செந்தூர் அருகே பரிதாபம் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை அரசு வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவு
திருச்செந்தூர் அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. நண்பர்களிடம் தகவலை கூறி விட்டு பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை நாகர்கோவிலில் பரிதாபம்
நண்பர்களிடம் தகவலை கூறி விட்டு பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. பெண்ணாடத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை - வேலையை விட்டு நீக்கியதால் விரக்தி
வேலையை விட்டு நீக்கியதால் மனவேதனையில் பெண்ணாடத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. திருமணமான 3 மாதத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை - உடல் பருமனாக இருந்ததால் விரக்தி?
உடல் பருமனாக இருந்ததால் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலத்தில் திருமணமான 3 மாதத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-