பன்றிக்காய்ச்சலை தடுக்க 20 லட்சம் மாத்திரைகள் இருப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


பன்றிக்காய்ச்சலை தடுக்க 20 லட்சம் மாத்திரைகள் இருப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:15 PM GMT (Updated: 9 Nov 2018 7:20 PM GMT)

பன்றிக்காய்ச்சலை தடுக்க 20 லட்சம் மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளது. இதில் பன்றிக்காய்ச்சலுக்கு தேவையான 20 லட்சம் மாத்திரைகள் இருப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை.

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் செவிலியர்கள் தேவைப்பட்டால் அவர்களை புதிதாக பணி நியமனம் செய்வதற்கு அந்தந்த மருத்துவ கல்லூரி டீனுக்கு தனி அதிகாரம் தற்போது வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் அரசு இந்த முடிவை தற்போது எடுத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story