தேனி மாவட்டத்தில்: 24 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


தேனி மாவட்டத்தில்: 24 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 7:59 PM GMT)

தேனி மாவட்டத்தில் 24 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்ட போலீஸ்நிலையங்களில் பணிபுரிந்து வரும் 24 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தேனி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த தீபக் ராஜதானிக்கும், அல்லிநகரத்தில் பணிபுரிந்த கிருஷ்ணகுமார் தேவதானப்பட்டிக்கும், பழனி செட்டிபட்டியில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் அல்லிநகரத்திற்கும், வீரபாண்டியில் பணிபுரிந்த லதா பழனிசெட்டிபட்டிக்கும், பெரியகுளத்தில் பணிபுரிந்த மாயன் போடிதாலுகா போலீஸ் நிலையத்துக்கும், தென்கரையில் பணிபுரிந்த முகமதுயாஹியா பெரியகுளத்திற்கும், தேவதானப்பட்டியில் பணிபுரிந்த சாகுல்அமீது ஆண்டிப்பட்டிக்கும், ஜெயமங்கலத்தில் பணிபுரிந்த அசோக் தென்கரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஆண்டிப்பட்டியில் பணியாற்றிய யாழ்இசைசெல்வன் ஜெயமங்கலத்திற்கும், க.விலக்கு போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய மலர்அம்மாள் வீரபாண்டிக்கும், ராஜதானியில் பணியாற்றிய ராமபாண்டியன் வருசநாடுக்கும், மயிலாடும்பாறையில் பணியாற்றிய ராஜா க.விலக்குக்கும், போடி டவுனில் பணியாற்றிய விக்னேஸ் பிரபு சின்னமனூருக்கும், போடிதாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மகேஸ்வரி போடி டவுனுக்கும், தேவாரத்தில் பணியாற்றிய முத்து செல்வன் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், சின்னமனூரில் பணியாற்றிய சுல்தான் இப்ராகிம் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும், உத்தமபாளையத்தில் பணியாற்றிய பிருந்தா தேவதானப்பட்டிக்கும், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஜெய்கணேஷ் ராயப்பன்பட்டிக்கும், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய வாணி தேவாரத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

மேலும் ராயப்பன்பட்டியில் பணிபுரிந்த முத்துப்பாண்டி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்துக்கும், கம்பம் தெற்கில் பணிபுரிந்த திவான்மைதீன் கம்பம் வடக்குக்கும், கம்பம் தெற்கில் பணிபுரிந்த முனியம்மாள் உத்தமபாளையத்திற்கும், வருசநாடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த அழகுபாண்டி மயிலாடும்பாறைக்கும், சின்னமனூரில் பணிபுரிந்த முத்துப்பாண்டி தேனிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story