மாவட்ட செய்திகள்

புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை + "||" + New groom suicide

புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்குன்றம், 

சென்னை செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பார்த்தியம் (வயது 37). அரிசி ஆலையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கும், ஜான்சிராணிக்கும் 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தீபாவளிக்காக ஜான்சிராணி சென்னையை அடுத்த கோவூரில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பார்த்தியம் தனது மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தியம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்்.