மாவட்ட செய்திகள்

பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையேகர்நாடக அரசு சார்பில் இன்று திப்பு ஜெயந்தி விழாமுதல்-மந்திரி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு + "||" + On behalf of Karnataka Government Today is the Tipu Jayanti Festival

பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையேகர்நாடக அரசு சார்பில் இன்று திப்பு ஜெயந்தி விழாமுதல்-மந்திரி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையேகர்நாடக அரசு சார்பில் இன்று திப்பு ஜெயந்தி விழாமுதல்-மந்திரி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு
பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு, 

பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திப்பு ஜெயந்தி விழா

கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திப்பு சுல்தான், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதனால் திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்தக்கூடாது என்றும் பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த விழா அழைப்பிதழில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை அச்சிடக்கூடாது என்று அக்கட்சி மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையே திப்பு ஜெயந்தி விழா இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நடக்கிறது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகிறார். இதில் மந்திரிகள் ஜமீர்அகமதுகான், யு.டி.காதர், ஜெயமாலா, மேயர் கங்காம்பிகே, கர்நாடக மேல்-சபை தற்காலிக தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

திப்பு ஜெயந்தி விழாவை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக பா.ஜனதா அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த விழாவை பா.ஜனதா புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. எதிர்ப்பை தொடர்ந்து பெங்களூரு விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடகு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு குடகு, கோலார் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் முதல்- மந்திரி கலந்துகொள்ள மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால், அவர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார் என்றும், வீட்டிலேயே குடும்பத்தினருடன் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

குமாரசாமிக்கு அதிருப்தி

விதான சவுதாவின் பாதுகாப்பு கருதி இந்த திப்பு ஜெயந்தி விழாவை ரவீந்திரகலாஷேத்ரா அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக துணை முதல்-மந்திரி கூறினார். முதல்-மந்திரி குமாரசாமியும் இதையே விரும்பியதாக கூறப்படுகிறது. இதற்கு மந்திரி ஜமீர்அகமதுகான் எதிர்ப்பு தெரிவித்தார். திப்பு ஜெயந்தி விழாவை எப்போதும் போல் விதான சவுதாவிலேயே நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மற்றும் மந்திரி ஜமீர்அகமதுகான் ஆகியோர் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சித்தராமையா, திப்பு ஜெயந்தி விழாவை விதான சவுதாவிலேயே நடத்துமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த விழா விதான சவுதா விருந்தினர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் குமாரசாமிக்கு அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் தான் அவர் இந்த விழாவில் பங்கேற்பதை தவிர்த்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.