மாவட்ட செய்திகள்

கடலூர், காட்டுமன்னார்கோவிலில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Cuddalore, kadamannaarkovil: Congress party demonstrated

கடலூர், காட்டுமன்னார்கோவிலில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர், காட்டுமன்னார்கோவிலில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர், 

மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்த நாளை காங்கிரஸ் கட்சியினர் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் பணமதிப்பிழப்பு தினத்தையொட்டி மத்திய அரசை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் குமார் வரவேற்றார். நகர தலைவர்கள் வேலுசாமி, திலகர், முருகன், வட்டார தலைவர்கள் ரமேஷ் ரெட்டியார், சீத்தாராமன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், காமராஜ், பார்த்திபன், முருகன், செல்வகுமார், ஓவியர்ரமேஷ், பொருளாளர் ராஜன், நகர செயலாளர்கள் கோபால், தண்டபாணி, பாலகுரு, மீனவர் அணி நிர்வாகிகள் கார்த்தி, பாலா மற்றும் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் அன்வர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜே.ஐ. மணிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதில் மாநில துணை தலைவர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, பழனிசாமி, விஸ்வநாதன், செந்தில்நாதன், மாவட்ட துணை தலைவர்கள் நசிர்அகமது, ஆசிரியர் ராமன், முன்னாள் சேவாதள தலைவர் சரவணகுமார், வட்டார தலைவர்கள் பாபுராஜன், கண்ணன், சங்கர், தமிழ்வாணன், ஜாகிர்உசேன், லால்பேட்டை நகர தலைவர் ஷிதயத்துல்லா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், இளங்கீரன், மகிளா காங்கிரஸ் கரோலினா மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் அலுவலகம் முன்பு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி தொழிலாளர்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. தஞ்சையில் நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. திருத்துறைப்பூண்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 100-க்கும் மேற்பட்டோர் கைது
திருத்துறைப்பூண்டியில் தொழிற்சங்கங்கள் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
5. தஞ்சையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.