மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்த விபத்தில்2 சிறுவர்களுடன் தாய்-தந்தை உடல் நசுங்கி சாவு + "||" + Larry crash Mother-father with 2 children The body is crushed and killed

லாரி கவிழ்ந்த விபத்தில்2 சிறுவர்களுடன் தாய்-தந்தை உடல் நசுங்கி சாவு

லாரி கவிழ்ந்த விபத்தில்2 சிறுவர்களுடன் தாய்-தந்தை உடல் நசுங்கி சாவு
லாரி கவிழ்ந்த விபத்தில் 2 சிறுவர்களுடன் தாய்-தந்தை உடல் நசுங்கி பலியானார்கள்.
மும்பை, 

லாரி கவிழ்ந்த விபத்தில் 2 சிறுவர்களுடன் தாய்-தந்தை உடல் நசுங்கி பலியானார்கள்.

லாரி கவிழ்ந்தது

பீட் மாவட்டம் மஜல்காவ்- பர்பானி நெடுஞ்சாலையில் நேற்று சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

அந்த லாரி முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் 2 மகன்களுடன் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது லாரியில் இருந்த சர்க்கரை மூட்டைகள் விழுந்து நசுக்கியது. இதில் 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

டிரைவர் கைது

உயிரிழந்தவர்களின் பெயர் தயானந்த் சோல்நாகே(வயது 42), அவரது மனைவி சங்கீதா(35), இவர்களின் மகன்கள் பிரிதிவிராஜ்(12), ராஜ் நந்தினி(10) என்பது தெரியவந்துள்ளது. விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ரூபேஷ் யாதவ்(30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.