காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2018 4:00 AM IST (Updated: 10 Nov 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

பணமதிப்பு நீக்கத்தின் 3-ம் ஆண்டு தொடக்க தினத்தையொட்டி காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.வி.மதியழகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மக்கள் விரோத மத்திய அரசை கண்டிக்கிறோம், பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசை கண்டிக்கிறோம் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் கே.பால், பெருமாள், அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் பாஸ்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. விசுவநாதன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மணவாளன், ஏகாட்டூர் ஆனந்தன், ஜே.டி.அருள்மொழி, ஜே.கே.வெங்கடேஷ், மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ராமச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஜோதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மனோ ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருநின்றவூர் காந்தி சிலை அருகே திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜேம்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆவடி நகர தலைவர் யுவராஜ், தலைமை கழக செயலாளர் செல்வம், தலைமை கழக பேச்சாளர் எர்னஸ்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story