காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வி‌ஷம்குடித்து தற்கொலை


காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வி‌ஷம்குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Nov 2018 4:15 AM IST (Updated: 10 Nov 2018 10:54 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காரிமங்கலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி ஊராட்சி பெத்தானூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சந்திரன் தனது தொழிலில் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்த வீட்டிற்கு பணம் தராமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அதற்காகவே செலவழித்து வந்துள்ளார். இதனால் மனைவி சித்ராவுக்கும், சந்திரனுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இதேபோல் நேற்று முன்தினமும் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்திரன் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி சித்ரா சத்தம் போட்டார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது சந்திரன் இறந்து கிடந்தது தெரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story