மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் மளிகைக்கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு + "||" + Theft in the grocery store

ஈரோட்டில் மளிகைக்கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

ஈரோட்டில் மளிகைக்கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் மளிகைக்கடையில் ரூ.40 ஆயிரம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமதுசுகேல் (வயது 36). இவர் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிஅளவில் முகமது சுகேல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 8 மணிஅளவில் அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடை ‌ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ‌ஷட்டரை திறந்து உள்ளே சென்றபோது, பணம் வைக்கப்பட்டு இருந்த மேஜையின் பொருட்கள் சிதறி கிடந்தன.

அதைத்தொடர்ந்து மேஜையில் பணம் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து முகமது சுகேல் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோவை போலீசார் பார்வையிட்டனர். அதில், அதிகாலை 3 மணிஅளவில் 2 வாலிபர்கள் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்ததும், அதில் ஒருவர் ஹெல்மெட்டை கழற்றி வைத்து கடையின் பூட்டை உடைத்ததும், பின்னர் கடைக்குள் நுழைந்த அவர் பணத்தை திருடிவிட்டு வெளியே வந்த காட்சிகளும் பதிவாகி இருந்தன.

மேலும், கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மோட்டார் சைக்கிளின் பூட்டை திறக்க முடியாததால், திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் பணம் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. திருட்டு சைக்கிளுடன் வந்த வாலிபர் கைது பறிகொடுத்த பெண்ணே மடக்கினார்
இளம்பெண் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் சில தினங்களுக்கு பின்னர் அதனை ஓட்டிச்சென்றபோது கைது செய்யப்பட்டார். பறிகொடுத்த பெண்ணே அவரை மடக்கினார்.
2. அரியாங்குப்பத்தில் அரசு ஊழியர் வீட்டில் புகுந்து 10 பவுன் தங்க நகை திருட்டு
அரியாங்குப்பத்தில் பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் புகுந்து யாரோ மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டனர்.
3. போடி அருகே பரபரப்பு: பால் வியாபாரி வீட்டில் 47 பவுன் நகைகள் திருட்டு
போடி அருகே, பால்வியாபாரி வீட்டில் 47 பவுன் நகை திருடு போனது.
4. மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை
திருவாரூரில் தவிடு வியாபாரியின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. தஞ்சையில் ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு வேலைக்கார பெண் கைது
தஞ்சையில் ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.