கோவை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்


கோவை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 7:26 PM GMT)

கோவை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை தெற்கு, கோவை வடக்கு மற்றும் சிங்காநல் லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில், தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தன், பரணி கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த உயிரிழப்பு களை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி, மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்பெற செய்ய வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனை கூட்டத்தில், சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, மெட்டல் மணி, நந்தகுமார், பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, கோட்டை அப்பாஸ், மூத்த வக்கீல்கள் கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி, கணேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story