சுங்குவார்சத்திரத்தில் பஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


சுங்குவார்சத்திரத்தில் பஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Nov 2018 3:00 AM IST (Updated: 11 Nov 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரத்தில் பஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு வேலை நிமித்தமாக சென்னை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் இங்கிருந்து பஸ்சில் ஸ்ரீபெரும்புதூர், மாம்பாக்கம் பகுதிகளுக்கு செல்கின்றனர். சுங்குவார்சத்திரம் பகுதியில் பஸ் நிலையம் இல்லாததால் சாலை ஓரத்தில் மழையிலும், வெயிலிலும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். இங்கு கழிவறை இல்லாமலும் குடிநீர் இல்லாமலும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கோரிக்கை

இந்த இடத்தில் மழை பெய்தால் ஒதுங்க நிழற்குடை கூட இல்லை. சுங்குவார்சத்திரத்தில் குடிநீர், கழிவை-,ற குழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டும் அறையுடன் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று கடந்தமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த பொளச்சூர் பெருமாள் மற்றும் தற்போது எம்,எல்.ஏ.வாக இருக்கும் மதனந்தபுரம் பழனியும் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் இது வரை பஸ் நிலையம் அமைக்கப்பட வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பல முறை சம்பந்தபட்ட அதிகரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட கலெக்டர் உடனடியாக சுங்குவார்சத்திரத்தில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story