உசிலம்பட்டி அருகே தடுப்பணையை உடைக்க எதிர்ப்பு பொதுமக்கள் முற்றுகை


உசிலம்பட்டி அருகே தடுப்பணையை உடைக்க எதிர்ப்பு பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 8:09 PM GMT)

உசிலம்பட்டி அருகே தடுப்பணையை உடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ளது வெள்ளைமலைப்பட்டி. இந்த பகுதியில் ஊராட்சித்துறை சார்பில் நடுப்பட்டி ஊராட்சி தாதம்பட்டி ஓடையில் தடுப்பணை கட்டுப்பட்டுஉள்ளது. இது 2017–18–ம் ஆண்டு, 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இந்த தடுப்பணை 58 கிராமக்கால்வாயில் இருந்து கீரிபட்டி கண்மாய்க்கு வைகை தண்ணீர் செல்ல எந்திரம் மூலம் உடைக்கப்பட்டது. இதற்கு வெள்ளைமலைப்பட்டி கிராமமக்கள், தடுப்பணையில் தண்ணீர் தேங்குவதால்தான் இப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் ஊறும், எனவே தடுப்பணையை உடைக்க கூடாது என்றும், உடைக்கக்கூடிய சூழல் உள்ள தடுப்பணையை ஏன் கட்டினீர்கள், என எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்ததால் எந்திரத்தை முற்றுகையிட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உசிலம்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி செயற்பொறியாளர் லீலாவதி மற்றும் உத்தப்பநாயக்கனூர் போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் 2 அடி அளவில் தடுப்பணையை உடைத்து தண்ணீர் கொண்டு செல்ல உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story