மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் நடவடிக்கையால் டெங்கு– பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது - செல்லூர் ராஜூ பேட்டி + "||" + Action of the state of Tamil Nadu Dengue-swine flu is controlled

தமிழக அரசின் நடவடிக்கையால் டெங்கு– பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது - செல்லூர் ராஜூ பேட்டி

தமிழக அரசின் நடவடிக்கையால் டெங்கு– பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது - செல்லூர் ராஜூ பேட்டி
தமிழக அரசின் நடவடிக்கையால் டெங்கு– பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி பெத்தானியபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலை ராஜா தலைமை தாங்கினார். பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

டெங்கு நோயை தடுக்கும் வண்ணம், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மதுரையில் உள்ள 10 பகுதிகளில் தினந்தோறும் காலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை நிலவேம்பு கசாயம், வழங்கப்படுகிறது.

எதிர்கட்சிகள் எல்லாம் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் பற்றி பேசி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் டெங்கு நோயும், பன்றிக்காய்ச்சலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் டெங்கு நோயால் 3,800 பேர் பாதிக்கப்பட்டு இதில் 17 பேர் இறந்தனர். இந்த ஆண்டு, 1,020 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே மராட்டிய மாநிலத்தில் 8,025 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 259 பேர் இறந்துள்ளனர்.

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் 1,200 முகாம்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மூலம் காய்ச்சல் நோய்களுக்காக ரூ.90 கோடி மதிப்பில் மருந்துகள் இருப்பில் உள்ளன. அது மட்டுமல்லாது டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கப்படும் சோதனை மையங்கள் 31–ல் இருந்து 131 மையமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரி தூர்வாரும்பணி; அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு
கோர்க்காடு ஏரி ரூ.63 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது. இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.
2. கவர்னர் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் - நாராயணசாமி பேட்டி
கவர்னர் தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. பல வே‌ஷமிட்டு நடித்தாலும் மு.க.ஸ்டாலினால் முதல்–அமைச்சராக முடியாது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
பல வே‌ஷமிட்டு நடித்தாலும் மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்–அமைச்சராக முடியாது என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
4. அரசியல் சுய லாபத்துக்காக, ராஜீவ்காந்தி பற்றி விமர்சிப்பதா? அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம்
அரசியல் சுய லாபத்துக்காக ராஜீவ்காந்தி பற்றி விமர்சிப்பதா? என்று அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. குடும்ப உறவினை தாண்டி அன்பு உருவாக வேண்டும் அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம்
குடும்ப உறவினை தாண்டி அன்பு உருவாக வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம் தெரிவித்தார்.