வேலூரில் 10 கிலோபிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


வேலூரில் 10 கிலோபிளாஸ்டிக் பொருட்கள்  பறிமுதல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 8:15 PM GMT)

சோதனையில் 279 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதார அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கடந்த 8–ந் தேதி மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 279 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 4–வது மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது டீக்கடை, மளிகை கடை, இனிப்பு, பேக்கரி கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், தெர்மாகோல் தட்டுகள் உள்ளிட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story