காட்ரம்பாக்கம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


காட்ரம்பாக்கம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 8:18 PM GMT)

காட்ரம்பாக்கம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த காட்ரம்பாக்கம் ஊராட்சியில் 1,500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. போதிய குப்பை தொட்டிகள் இல்லாததால் குப்பைகள் சாலை ஓரத்தில் தேங்கி கிடக்கிறது.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உள்பட அனைவருக்கும் தேங்கி உள்ள குப்பைகளால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கோரிக்கை

குறிப்பாக பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் அதிகமாக வைக்க வேண்டும்.

தினந்தோறும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story