ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் பெண் பலியானார்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் மேட்டு காலனி தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 58). லாரி டிரைவர். இவரது மனைவி காளியம்மாள் (50). மகன் தேவன் (30), மகள் மருதாணி ( 25). இவர்களில் தேவன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தேவன் தன்னுடைய தாய் காளியம்மாள், தங்கை மருதாணியை மோட்டார்சைக்கிளில் ஏற்றி கொண்டு பென்னாலூர்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
வெலமகண்டிகை பகுதியில் செல்லும்போது புலிகுன்றம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் காளியம்மாள், தேவன், மருதாணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் காளியம்மாள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் இறந்தார்.
இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story