மாவட்ட செய்திகள்

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் + "||" + Awareness Meeting on Minorities Welfare Schemes

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தேனியில் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையின வகுப்பை சேர்ந்தவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. நலத்திட்டங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், அவற்றுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், நலத்திட்டங்கள் பெறுவதற்கான தகுதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
2. தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கில் போடும் உத்தரவு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
தேனி காதல் ஜோடி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கில் போடுவதற்கான கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
3. தேனி: ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு
தேனி, ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டினால் உரிமம் ரத்து - போலீசார் எச்சரிக்கை
தேனி, அம்மையநாயக்கனூர் அருகே தனியார் பஸ்களால் விபத்து ஏற்பட்டதையடுத்து அதிவேகமாக பஸ்களை ஓட்டினால் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5. தேனி அருகே பேருந்து - வேன் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழப்பு
தேனி அருகே பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.