முதல் பெண் கண்டக்டர்


முதல் பெண் கண்டக்டர்
x
தினத்தந்தி 11 Nov 2018 3:57 PM IST (Updated: 11 Nov 2018 3:57 PM IST)
t-max-icont-min-icon

அரியானா மாநிலத்தின் முதல் பெண் கண்டக்டர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார், சர்மிளா.

32 வயதான சர்மிளா மாற்றுத்திறனாளி. இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அரியானா மாநில போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது இவர் கண்டக்டர் வேலை கேட்டு விண்ணப்பித்து வேலையையும் பெற்று விட்டார்.

சர்மிளாவால் சரிவர நடக்க முடியாது. ஒரு கால் 40 சதவீதம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 8 ஆண்டு களாக வேலை தேடிக்கொண்டிருந்திருக்கிறார். மாற்றுத்திறனாளி என்பதால் வேலை கிடைப்பதில் சிரமம் இருந்திருக்கிறது. தான் மாற்றுத்திறனாளி என்றபோதும் இவர் தனது பணியை செம்மையாக செய்கிறார். பயணிகளும் இவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

‘‘நானும் என் கணவரும் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். இரண்டு குழந்தைகளை வளர்ப்பது சிரமமாக இருந்தது. இந்த வேலை என் குடும்ப பாரத்தை குறைக்கும். முதல் பெண் கண்டக்டர் என்ற சிறப்பை பெற்றிருப்பது மன மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். நான் மாற்றுத்திறனாளி என்றாலும் என் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன்’’ என்கிறார்.

Next Story