வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வை 20 ஆயிரம் பேர் எழுதினர் 5,868 பேர் வரவில்லை


வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வை 20 ஆயிரம் பேர் எழுதினர் 5,868 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 2:29 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வை 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். 5,868 பேர் வரவில்லை.

வேலூர், 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்–2 தேர்வு நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 978 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுத 7 மையங்களில் 95 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று 10.30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

விண்ணப்பித்தவர்களில் 5 ஆயிரத்து 868 பேர் தேர்வு எழுதவரவில்லை. 20 ஆயிரத்து 110 பேர் தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்களாக 95 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். 18 நடமாடும் குழு, 10 பறக்கும்படை அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா என்பது குறித்து கண்காணித்தனர்.

தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாணியம்பாடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.


Next Story